இந்தியா - இலங்கை கூட்டறிக்கை: எதிர்காலத்திற்கான கூட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடிவு

December 16th, 03:26 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியும் இலங்கை அதிபர் திரு அனுர குமார திசநாயகவும் இன்று (2024 டிசம்பர் 16) புதுதில்லியில் சந்தித்தபோது, விரிவான, பயனுள்ள விவாதங்களை நடத்தினர்.

ஹரியானா மாநிலம் பானிபட்டில் வளர்ச்சித் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

December 09th, 05:54 pm

ஹரியின் இருப்பிடம் ஹரியானா, இங்கே, உள்ள அனைவரும் 'ராம் ராம்' என ஒருவருக்கொருவர் மனமார வாழ்த்திக் கொள்கின்றனர்.

எல்.ஐ.சியின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

December 09th, 04:30 pm

மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் நிதி உள்ளடக்கம் குறித்த உறுதிப்பாட்டின் அடிப்படையில், ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் பீமா சகி திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி ஹரியானா மாநிலம் பானிபட்டில் இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது, கர்னாலில் உள்ள மஹாராணா பிரதாப் தோட்டக்கலை பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டினார். அப்போது உரையாற்றிய திரு மோடி, மகளிருக்கு அதிகாரம் அளிப்பதை நோக்கி இந்தியா மற்றொரு வலுவான அடியை எடுத்து வைக்கிறது என்று கூறினார். இன்று மாதத்தின் 9 வது நாளாக இருப்பது சிறப்பு வாய்ந்தது, ஏனெனில் எண் 9 நமது புனிதங்களில் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது மற்றும் நவராத்திரியின் போது வணங்கப்படும் நவ துர்க்கையின் ஒன்பது வடிவங்களுடன் தொடர்புடையது என்று அவர் கூறினார். இன்றைய தினம் பெண் சக்தியை வழிபடும் நாளாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

The BJP has entered the electoral field in Jharkhand with the promise of Suvidha, Suraksha, Sthirta, Samriddhi: PM Modi in Garhwa

November 04th, 12:21 pm

Prime Minister Narendra Modi today addressed a massive election rally in Garhwa, Jharkhand. Addressing the gathering, the PM said, This election in Jharkhand is taking place at a time when the entire country is moving forward with a resolution to become developed by 2047. The coming 25 years are very important for both the nation and Jharkhand. Today, there is a resounding call across Jharkhand... ‘Roti, Beti, Maati Ki Pukar, Jharkhand Mein…Bhajpa, NDA Sarkar’.”

PM Modi campaigns in Jharkhand’s Garhwa and Chaibasa

November 04th, 11:30 am

Prime Minister Narendra Modi today addressed massive election rallies in Garhwa and Chaibasa, Jharkhand. Addressing the gathering, the PM said, This election in Jharkhand is taking place at a time when the entire country is moving forward with a resolution to become developed by 2047. The coming 25 years are very important for both the nation and Jharkhand. Today, there is a resounding call across Jharkhand... ‘Roti, Beti, Maati Ki Pukar, Jharkhand Mein…Bhajpa, NDA Sarkar’.”

குஜராத் மாநிலம் அம்ரேலியில் அடிக்கல் நாட்டி வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

October 28th, 04:00 pm

குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் அவர்களே, குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல் அவர்களே, மத்திய அரசில் எனது சகாவான சி.ஆர். பாட்டீல் அவர்களே, குஜராத்தின் எனது சகோதர சகோதரிகளே, குறிப்பாக அம்ரேலியின் எனது சகோதர சகோதரிகளே,

குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்

October 28th, 03:30 pm

குஜராத் மாநிலம் அம்ரேலியில் ரூ.4,900 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் ரயில், சாலை, நீர் மேம்பாடு மற்றும் சுற்றுலாத் துறைகளை உள்ளடக்கியதாகும். இவை அம்ரேலி, ஜாம்நகர், மோர்பி, துவாரகா, ஜூனாகத், போர்பந்தர், கட்ச் மற்றும் போடாட் மாவட்டங்களின் மக்களுக்கு பயனளிக்கும்.

மகாராஷ்டிராவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

October 09th, 01:09 pm

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக ஊழியர்களே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னவிஸ் அவர்களே, திரு அஜித் பவார் அவர்களே, இதர பிரமுகர்களே, மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே

மகாராஷ்டிராவில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

October 09th, 01:00 pm

மகாராஷ்டிர மாநிலத்தில் ரூ.7,600 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.10.2024) காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான நிலைய மேம்பாட்டுக்கு அடிக்கல் நாட்டுதல், ஷீரடி விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடம் ஆகியவை இன்று மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகளில் அடங்கும். மகாராஷ்டிராவில் 10 அரசு மருத்துவக் கல்லூரிகளின் செயல்பாட்டையும் தொடங்கி வைத்த திரு நரேந்திர மோடி, மும்பையில் இந்திய திறன் நிறுவனத்தையும், மகாராஷ்டிர மாநிலத்தில் கல்வி ஆராய்ச்சி மையத்தையும் தொடங்கி வைத்தார்.

மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை முன்முயற்சிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 05th, 12:05 pm

மகாராஷ்டிர ஆளுநர் திரு சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களே, மாநில முதலமைச்சர் திரு ஏக்நாத் ஷிண்டே அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சக உறுப்பினர்களான திரு சிவராஜ் சிங் சவுகான், திரு ராஜீவ் ரஞ்சன் சிங் அவர்களே, மகாராஷ்டிர துணை முதலமைச்சர்கள் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், திரு அஜித் பவார் அவர்களே, மத்திய, மாநில அரசுகளின் இதர அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, தொலைதூரத்திலிருந்து வந்துள்ள பஞ்சாரா சமூகத்தைச் சேர்ந்த எனது சகோதர, சகோதரிகளே, நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ள விவசாய சகோதர சகோதரிகளே!

மகாராஷ்டிர மாநிலம் வாஷிமில் ரூ.23,300 கோடி மதிப்பிலான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

October 05th, 12:01 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி மகாராஷ்டிரா மாநிலம் வாஷிமில் ரூ.23,300 கோடி மதிப்பிலான வேளாண் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை தொடர்பான பல்வேறு முன்முயற்சிகளை இன்று தொடங்கி வைத்தார். பிரதமரின் உழவர் நல நிதியின் 18 வது தவணையை வழங்குதல், நமோ விவசாயிகள் பெருங்கவுரவ நிதி திட்டத்தின் 5- வது தவணையைத் தொடங்குதல், வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 7,500 க்கும் மேற்பட்ட திட்டங்களை அர்ப்பணித்தல், 9,200 உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், மகாராஷ்டிரா முழுவதும் மொத்தம் 19 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து சூரிய பூங்காக்கள் மற்றும் கால்நடைகளுக்கான ஒருங்கிணைந்த மரபணு சிப் மற்றும் உள்நாட்டு பாலின வகைப்படுத்தப்பட்ட விந்து தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல் ஆகியவை இந்த முன்முயற்சிகளில் அடங்கும்.

அக்டோபர் 5 அன்று பிரதமர் மகாராஷ்டிரா பயணம்

October 04th, 05:39 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி அக்டோபர் 5 அன்று மகாராஷ்டிர மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை 11:15 மணியளவில் போஹாராதேவியில் உள்ள ஜகதாம்பா மாதா கோவிலில் தரிசனம் செய்கிறார். வாஷிமில் உள்ள துறவி சேவாலால் மகாராஜ் மற்றும் துறவி ராம்ராவ் மகாராஜ் ஆகியோரின் நினைவிடங்களிலும் அவர் அஞ்சலி செலுத்துகிறார். அதன்பிறகு, காலை 11.30 மணியளவில், பஞ்சாரா சமூகத்தின் வளமான பாரம்பரியத்தை போற்றும் பஞ்சாரா விராசத் அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். நண்பகல் 12 மணியளவில், சுமார் ரூ .23,300 கோடி மதிப்புள்ள விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புத் துறை சார்ந்த பல முயற்சிகளை அவர் தொடங்கிவைக்கிறார். மாலை 4 மணியளவில், தானேவில் ரூ .32,800 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், பி.கே.சி மெட்ரோ நிலையத்திலிருந்து, மும்பையின் ஆரே ஜே.வி.எல்.ஆர் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ள மெட்ரோ ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைப்பார். பி.கே.சி மற்றும் சாண்டாக்ரூஸ் நிலையங்களுக்கு இடையிலான மெட்ரோவில் அவர் பயணம் செய்கிறார்.

தூய்மையே சேவை 2024 நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

October 02nd, 10:15 am

இன்று மகாத்மா காந்தி , லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள். அன்னை பாரதத்தின் இந்த மகத்தான புதல்வர்களுக்கு நான் தாழ்மையுடன் தலைவணங்குகிறேன். காந்திஜி மற்றும் நாட்டின் பெரிய மனிதர்கள் பாரதம் குறித்து கண்ட கனவை நிறைவேற்ற, ஒன்றிணைந்து பணியாற்ற இந்த நாள் நம் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கிறது.

தூய்மை இந்தியா தினம் 2024-ல் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்

October 02nd, 10:10 am

தூய்மைக்கான மிக முக்கிய மக்கள் இயக்கங்களில் ஒன்றான தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், 155-வது காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று (அக்டோபர் 2 அன்று) புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தூய்மை இந்தியா தினம் 2024 நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அம்ருத் மற்றும் அம்ருத் 2.0, தூய்மை கங்கைக்கான தேசிய இயக்கம், கோபர்தன் திட்டம் உள்ளிட்ட ரூ.9,600 கோடி மதிப்பிலான பல்வேறு துப்புரவு மற்றும் தூய்மைத் திட்டங்களைத் திரு மோடி தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். தூய்மையே சேவை இயக்கம்-2024-ன் கருப்பொருள் 'தூய்மைப் பழக்கம், தூய்மைக் கலாச்சாரம்.'

PM Modi's conversation with Lakhpati Didis in Jalgaon, Maharashtra

August 26th, 01:46 pm

PM Modi had an enriching interaction with Lakhpati Didis in Jalgaon, Maharashtra. The women, who are associated with various self-help groups shared their life journeys and how the Lakhpati Didi initiative is transforming their lives.

The Lakhpati Didi initiative is changing the entire economy of villages: PM Modi in Jalgaon, Maharashtra

August 25th, 01:00 pm

PM Modi attended the Lakhpati Didi Sammelan in Jalgaon, Maharashtra, where he highlighted the transformative impact of the Lakhpati Didi initiative on women’s empowerment and financial independence. He emphasized the government's commitment to uplifting rural women, celebrating their journey from self-help groups to becoming successful entrepreneurs. The event underscored the importance of economic inclusivity and the role of women in driving grassroots development across the nation.

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

August 25th, 12:30 pm

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கானில் இன்று (25.08.2024) நடைபெற்ற லட்சாதிபதி சகோதரிகள் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். தற்போதைய அரசின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் சமீபத்தில் லட்சாதிபதி ஆன 11 லட்சம் புதிய லட்சாதிபதி சகோதரிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார். நாடு முழுவதிலும் உள்ள லட்சாதிபதி சகோதரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார். 4.3 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 48 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.2,500 கோடி சுழல் நிதியை திரு நரேந்திர மோடி விடுவித்தார். 2.35 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 25.8 லட்சம் உறுப்பினர்கள் பயனடையும் வகையில் ரூ.5,000 கோடி வங்கிக் கடன்களையும் அவர் வழங்கினார். லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, ஏற்கனவே ஒரு கோடி பெண்கள் லட்சாதிபதி சகோதரிகளாக மாற்றப்பட்டுள்ளனர். மேலும் மூன்று கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமர் வழங்கிய பதிலுரையின் தமிழாக்கம்

July 03rd, 12:45 pm

இந்த விவாதத்திற்கு பதிலளித்து பேசும் நான், குடியரசுத் தலைவரின் உரைக்கு எனது நன்றியைத் தெரிவிக்கிறேன். குடியரசுத் தலைவரின் உரை உத்வேகம் அளிப்பதோடு மட்டுமல்லாமல் நாட்டு மக்களின் விருப்பங்களை பிரதிபலிப்பதாகவும் இருந்தது.

குடியரசுத்தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு மாநிலங்களவையில் பிரதமரின் பதிலுரை

July 03rd, 12:00 pm

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதிலளித்தார்.

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற உழவர் நல மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை

June 18th, 05:32 pm

உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, பகீரத் சவுத்ரி அவர்களே, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, மாநில அரசின் பிற அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, பெருந்திரளாக கூடியுள்ள எனது விவசாய சகோதர சகோதரிகளே, என் காசியின் குடும்ப உறுப்பினர்களே!