உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தல் மற்றும் அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழ் மொழியாக்கம்
March 24th, 05:42 pm
உத்தரபிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களே, மாநில அரசின் அமைச்சர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, பிற உயரதிகாரிகளே மற்றும் காசியின் என் அன்பு சகோதர சகோதரிகளே!உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் ரூ.1780 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
March 24th, 01:15 pm
வாரணாசியில் ரூ.1780 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்த பிரதமர் திரு.நரேந்திர மோடி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். வாரணாசி கண்டோன்மென்ட் நிலையத்திலிருந்து கடோவ்லியாவுக்கு பயணிகள் கம்பிவடப் பாதை, கங்கை புத்துயிரூட்டல் திட்டத்தின் கீழ் பகவான்பூரில் 55 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், சிக்ரா விளையாட்டு மைதானத்தின், 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மறுமேம்பாட்டுப் பணி, இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகத்தால் சேவாபுரியின் இசர்வார் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள எல்பிஜி நிரப்பும் நிலையம், பர்தாரா கிராமத்தில் ஆரம்ப சுகாதார மையம், மிதக்கும் ஜெட்டி ஆகிய திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 63 கிராம பஞ்சாயத்துக்களைச் சேர்ந்த 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்குப் பயனளிக்கும், 19 குடிநீர் வழங்கும் திட்டங்கள், ஜல்ஜீவன் இயக்கத்தின் கீழ் பிரதமரால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் 59 குடிநீர் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். கர்கியாவோனில், பழங்கள் மற்றும் காய்கறிகளை பதப்படுத்தும் ஒருங்கிணைந்த நிலையத்தை அவர் திறந்து வைத்தார். வாரணாசி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.