வான்வழி போக்குவரத்து கொள்கை புதிய இந்தியாவின் எழுச்சிக்கு சிறகுகளை அளிக்கிறது
April 27th, 10:37 am
பிரதமர் மோடி மாநில இணைப்பு திட்டத்தின் கீழ், முதல் உதான் விமானத்தை கொடி அசைத்து துவக்கினார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, இந்தியாவின் வான் வழி போக்குவரத்து துறையில் வாய்ப்புகள் நிறைந்துள்ளது. வான்வழி போக்குவரத்து கொள்கை ஒவ்வொரு இந்தியனின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உள்ளது, என்று பிரதமர் கூறினார். “முன்பு வான் வழி போக்குவரத்து என்பது சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் தான் என்றிருந்தது. அது இப்போது மாறிவிட்டது”, என்று பிரதமர் குறிப்பிட்டார்.சிம்லாவிலிருந்து பொது மக்களுக்கான மாநில இணைப்பு வான்வழி போக்குவரத்து திட்டம் உதானை பிரதமர் தொடக்கினார்
April 27th, 10:36 am
பிரதமர் நரேந்திர மோடி மாநில இணைப்பு திட்டத்தின் கீழ், முதல் உதான் விமானத்தை கொடி அசைத்து துவக்கினார். இந்த திட்டம், பயன்படுத்தப்படாத அல்லது முழு வீச்சுடன் பயன்படுத்தப்படாத விமான நிலையங்களை செயல்பட வைத்து, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை இணைக்கும் நோக்கம் கொண்டது. ஹைட்ரோ என்ஜினியரிங் கல்லூரிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.