மகாராஷ்டிராவின் மரோலில் அல்ஜமியா-துஸ்-சைஃபியாவின் புதிய வளாகத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 10th, 08:27 pm

உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு வீடு திரும்புவது அல்லது குடும்பத்துடன் இருப்பது போன்றது. நான் இன்று உங்கள் வீடியோவைப் பார்த்தேன், அதுபற்றி ஒரு கருத்து தெரிவிக்க விரும்புகிறேன், அத்துடன் நீங்கள் அதில் சில மாற்றங்களைச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் எங்களை 'மாண்புமிகு முதலமைச்சர்' என்றும் 'மாண்புமிகு பிரதமர்' என்றும் திரும்பத் திரும்ப குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினர்; இங்கு நான் பிரதமரும் இல்லை, முதலமைச்சரும் இல்லை. என்னைப் போல் சிலருக்கு அதிர்ஷ்டம் இருக்கலாம். நான் 4 தலைமுறைகளாக இந்தக் குடும்பத்துடன் இணைந்திருக்கிறேன், நான்கு தலைமுறையினரும் என் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். வெகு சிலருக்கே இப்படி ஓர் அதிர்ஷ்டம் இருக்கிறது, அதனால்தான் படத்தில் 'முதலமைச்சர்', 'பிரதமர்' என்று திரும்பத் திரும்பப் பயன்படுத்தப்படும் சொற்களால் நான் அசௌகரியமாக இருக்கிறேன்.

மும்பையில், அல்ஜாமீயா-துஸ்-சைஃபியாவின் புதிய வளாகத்தை பிரதமர் திறந்துவைப்பு

February 10th, 04:45 pm

மும்பை நகரின் மாரோலில் அல்ஜாமீயா-துஸ்-சைஃபியாவின் புதிய வளாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி திறந்து வைத்தார். அல்ஜாமீயா-துஸ்-சைஃபியா என்பது தாவூதி போரா சமூகத்தின் முதன்மை கல்வி நிறுவனமாகும்.