உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவு நாளில் `உடல்தகுதி மிக்க இந்தியா கலந்துரையாடலில்’ பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
September 24th, 12:01 pm
நாட்டிற்கு உத்வேகம் அளித்த இதுபோன்ற ஏழு சிறந்த ஆளுமைகளுக்கும் இன்று நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், ஏனென்றால் உங்கள் நேரத்தை செலவழித்து சொந்த அனுபவங்களைச் சொன்னீர்கள். இது ஒவ்வொரு தலைமுறைக்கும் மிகவும் பயனளிக்கும் என்று நான் நினைக்கிறேன். இன்றைய கலந்துரையாடல் அனைத்து வயதினருக்கும், பல்வேறு தரப்பினருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதல் ஆண்டு நிறைவு நாளில், நாட்டு மக்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.வயதுக்கு உகந்த உடல்தகுதி பயிற்சிகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர்
September 24th, 12:00 pm
உடல்தகுதி மிக்க இந்தியா இயக்கத்தின் முதலாவது ஆண்டு நிறைவை ஒட்டி இன்று காணொலிக் காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் திரு. நரேந்திர மோடி,வயதுக்கு உகந்த உடல்தகுதி பயிற்சிகள் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.