ஏரோ இந்தியா 2023 காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
February 13th, 07:31 pm
ஏரோ இந்தியா 2023 காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது:கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஏரோ இந்தியா 2023 தொடக்க விழாவில் பிரதமர் உரையின் தமிழாக்கம்
February 13th, 09:40 am
இன்றைய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கர்நாடக மாநில ஆளுநர், முதலமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எனது அமைச்சரவை உறுப்பினர்கள், வெளிநாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள், தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் தாய்மார்கள், பெரியோர்களுக்கு வணக்கம்.14-வது ஏரோ இந்தியா 2023-ஐ பெங்களூருவில் பிரதமர் தொடங்கி வைத்தார்
February 13th, 09:30 am
14-வது ஏரோ இந்தியா 2023-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பெங்களூரு யெலஹங்காவில் உள்ள விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார். ஏரோ இந்தியா 2023 இன் கருப்பொருள் “ஒரு பில்லியன் வாய்ப்புகளுக்கான ஓடுபாதை” என்பதாகும். 80-க்கும் மேற்பட்ட நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன. மேலும் 800 பாதுகாப்பு நிறுவனங்கள், சுமார் 100 வெளிநாட்டு மற்றும் 700 இந்திய நிறுவனங்கள் உட்பட. ‘மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட்’ என்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள்/தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல், வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டுறவை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் இந்த நிகழ்வு கவனம் செலுத்தும்.