ஆரம்ப் 6.0 விழாவில் இளம் குடிமைப் பணியாளர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்
October 30th, 09:17 pm
ஆரம்ப் 6.0, விழாவில் இளம் குடிமைப் பணி அதிகாரிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார். மக்கள் பங்களிப்பு உணர்வுடன் நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து இளம் குடிமைப் பணியாளர்களுடன் பிரதமர் விரிவாக விவாதித்தார். வலுவான பின்னூட்ட வழிமுறைகள் மற்றும் குறை தீர்க்கும் முறைகளை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார். குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை மேம்படுத்துமாறு இளம் குடிமைப் பணியாளர்களை பிரதமர் வலியுறுத்தினார்.பிரதமர் அக்டோபர் 30-31 அன்று குஜராத்தில் பயணம்
October 29th, 03:35 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அக்டோபர் 30, 31 ஆகிய இரு நாட்களில் குஜராத்தில் பயணம் மேற்கொள்கிறார். அக்டோபர் 30 அன்று, அவர் கெவாடியாவில் உள்ள ஏக்தா நகருக்குச் செல்கிறார், மாலை 5:30 மணியளவில், ஏக்தா நகரில் ரூ.280 கோடிக்கும் மேலான மதிப்புடைய பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அதன்பிறகு, மாலை 6 மணியளவில், ஆரம்ப் 6.0-இன் 99-வது பொது அடிப்படைப் படிப்பு பயிற்சி அதிகாரிகளிடையே அவர் உரையாற்றுகிறார். அக்டோபர் 31 அன்று, காலை 7:15 மணியளவில், ஒற்றுமையின் சிலைக்கு பிரதமர் மலரஞ்சலி செலுத்துகிறார். அதைத் தொடர்ந்து தேசிய ஒருமைப்பாட்டு தின கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.