அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.

June 30th, 11:00 am

நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.

பொது சேவை ஒலிபரப்புக்கு பெரும் ஊக்கம்: பிரசார் பாரதி உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.2539.61 கோடி ஒதுக்க பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல்

January 04th, 04:22 pm

அகில இந்திய வானொலி, தூர்தர்ஷன் ஆகியவற்றை உள்ளடக்கிய பிரசார் பாரதியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு 2025-26 ஆம் ஆண்டு வரை, ரூ.2539.61 கோடி ஒதுக்கீடு செய்ய பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. பிரசார் பாரதியின் உள்ளீட்டு மேம்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு இது உதவுவதுடன், சிவில் கட்டுமானப் பணிகளுக்கும் ஆதரவு வழங்கும். ஒலிபரப்பு உள்கட்டமைப்பு மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்படும்.

அனைவரும் உறுதியாகவும், திட மனது கொண்டவர்களாகவும் இருந்தால் எத்தகைய கடினநிலையில் இருந்தும் விடுபடலாம்: மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

July 29th, 11:30 am

தாய்லாந்தில் கால்பந்தாட்டம் ஆடும் 12 சிறுவர்களின் குழுவும் அவர்களின் பயிற்றுநரும் சுற்றிப் பார்க்க ஒரு குகைக்குச் சென்று அங்கு மாட்டிகொண்டனர் மற்றும் அவர்களை மீட்கும் பணிகளைப் பற்றி மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார். இதன் மூலம் நாம் அமைதியாகவும், திடமனதுடையவர்களாகவும் இருந்து இலக்கையே குறி வைத்து, அதன்பொருட்டு அயராது பணியாற்ற வேண்டும் என்பதே தேவையாக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஒருமுறை மீண்டும் பாரத அன்னையின் இரண்டு மகத்தான சத்புத்திரர்களுக்கு – லோக்மான்ய திலகர், சந்திரசேகர ஆசாத் இருவருக்கும் சிரத்தையுடனான பிரதமர் தனது நினைவஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறார்.

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் நாளை உரையாடுகிறார்.

June 19th, 07:17 pm

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை காலை 9.30 மணிக்கு காணொலி பதிவு மூலம் உரையாடுகிறார். இந்த உரையாடல் மூலம் விவசாயிகளின் பேச்சை பிரதமர் நேரடியாக கேட்க முடியும்.