ரூர்கேலாவில் ஆதி மஹோத்ஸவம் குறித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவு

April 08th, 11:33 am

நமது பழங்குடியின சமூகங்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் இந்தியாவின் பெருமையை பிரதமர் திரு நரேந்திர மோடி சுட்டிக் காட்டியுள்ளார்.

‘ஆதி மஹோத்சவ்’ மீதான ஆர்வம் குறித்து பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்

February 23rd, 09:15 am

‘ஆதி மஹோத்சவ்’ மீதான பரவலான ஆர்வம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மக்களவை உறுப்பினர் டாக்டர். போலா சிங் 'ஆதி மஹோத்சவ்' நிகழ்ச்சியை தான் பார்வையிட்டது குறித்து தொடர் ட்வீட் பதிவு செய்திருந்தார். அதில், இந்தியா முழுவதிலுமிருந்து பழங்குடி கலாச்சாரத்தின் அற்புதமான விளக்கக்காட்சியை நீங்கள் காணக்கூடிய வகையில் இது மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டிருந்தார். அந்த தொடர் ட்வீட்டிற்கு பிரதமர் பதிலளித்தார்.

புது தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் "ஆதி மஹோத்சவ்" தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 16th, 10:31 am

எனது அமைச்சரவை சகாக்களான திரு அர்ஜுன் முண்டா அவர்களே, திரு ஃபக்கன் சிங் குலாஸ்தே அவர்களே, திருமதி. ரேணுகா சிங் அவர்களே, டாக்டர் பார்தி பவார் அவர்களே, திரு பிசேஷ்வர் டூ டு அவர்களே, பிற உயரதிகாரிகள் மற்றும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த எனது பழங்குடியின சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆடி மஹோத்ஸவ் நல்வாழ்த்துக்கள்.

புதுதில்லியின் மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் ஆதி மகோத்சவத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்

February 16th, 10:30 am

ஆதி மகோத்சவம் என்ற பிரம்மாண்டமான தேசிய பழங்குடி திருவிழாவை தில்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். பழங்குடி மக்களின் கலாச்சாரத்தை தேசிய அளவில் எடுத்துரைக்கும் இந்த முயற்சி, பழங்குடி கலாச்சாரம், கலைப் பொருட்கள், உணவு, வர்த்தகம் மற்றும் பாரம்பரிய கலைகளின் உணர்வைப் போற்றுகிறது. இது, மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் மேம்பாட்டு கூட்டமைப்பால் (ட்ரைஃபெட்) ஆண்டுதோறும் நடத்தப்படும் நிகழ்வாகும்.

டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசியமைதானத்தில் பிப்ரவரி 16ஆம்தேதி ஆடி மஹோத்சவை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

February 15th, 08:51 am

நாட்டின் பழங்குடியின மக்களின் நலனுக்காக நடவடிக்கை எடுப்பதிலும், நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்புக்கு உரிய மரியாதை அளிப்பதிலும் பிரதமர் முன்னணியில் உள்ளார். தேசிய அளவில் பழங்குடியினரின் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் முயற்சியாக, பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆடி மஹோத்சவ், மெகா தேசிய பழங்குடியினர் திருவிழாவை பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 10:30 மணிக்கு டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசிய மைதானத்தில் தொடங்கி வைக்கிறார்.