சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டு & பிரம்ம வித்யாலயாவின் பொன் விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
April 26th, 10:31 am
ஸ்ரீ நாராயண தர்ம சங்கம் அறக்கட்டளை தலைவர் சுவாமி சச்சிதானந்தா அவர்களே, பொதுச் செயலாளர் சுவாமி ரீதாம்பரானந்தா அவர்கேளே, மத்திய அமைச்சரவையின் எனது சகாக்களே, கேரள மண்ணின் மைந்தர்களான திரு வி முரளீதரன் அவர்களே, ராஜீவ் சந்திரசேகர் அவர்களே, ஸ்ரீ நாராயண தர்ம சங்கம் அறக்கட்டளையின் அலுவலர்களே, உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளின் பக்தர்களே, பெரியோர்களே, தாய்மார்களே,பிரம்ம வித்யாலயாவின் பொன்விழா மற்றும் சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டின் ஓராண்டு கால கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்றார்
April 26th, 10:30 am
சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டு மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன் விழா ஆகியவற்றின் ஓராண்டு கால கூட்டுக் கொண்டாட்டத்தின் துவக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் பங்கேற்றார். இந்த ஓராண்டு கால கொண்டாட்டத்திற்கான இலச்சினையையும் அவர் வெளியிட்டார். சிவகிரி புனித யாத்திரை, பிரம்ம வித்யாலயா ஆகியவை பெரும் சமூக சீர்திருத்தவாதியான ஸ்ரீ நாராயண குருவின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டவையாகும். சிவகிரி மடத்தைச் சேர்ந்த ஆன்மீக தலைவர்கள், பக்தர்கள் ஆகியோருடன் மத்திய அமைச்சர்கள் திரு.ராஜீவ் சந்திரசேகர், திரு.வி.முரளிதரன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.7, லோக் கல்யாண் மார்கில் நடைபெற உள்ள சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டு மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன்விழா ஆகியவற்றின் ஓராண்டு கால கூட்டான கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்
April 25th, 07:43 pm
7, லோக் கல்யாண் மார்கில் 2022 ஏப்ரல் 26, அன்று காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ள சிவகிரி புனித யாத்திரையின் 90-வது ஆண்டு மற்றும் பிரம்ம வித்யாலயாவின் பொன்விழா ஆகியவற்றின் ஓராண்டு கால கூட்டான கொண்டாட்டங்களின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்பார். இந்த கொண்டாட்டங்களுக்கான இலச்சினையையும் அவர் வெளியிடுவார். சிவகிரி புனித யாத்திரை, பிரம்ம வித்யாலயா ஆகியவை மாபெரும் சமூக சீர்திருத்தவாதி, திரு நாராயண குருவின் ஆசி மற்றும் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்டன.