பிரதமர் நாளை வாரணாசி பயணம்
October 19th, 05:40 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி நாளை (அக்டோபர் 20) வாரணாசிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிற்பகல் 2 மணியளவில் ஆர்.ஜே.சங்கரா கண் மருத்துவமனையை அவர் திறந்து வைக்கிறார். அதன்பிறகு, மாலை 4:15 மணியளவில், வாரணாசியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுகிறார்.காசியில் உள்ள டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார்
June 18th, 11:20 pm
காசியில் விவசாயிகள் நல நிதித் திட்டத்தில் நிதி விடுவித்தல், கங்கா ஆரத்தி மற்றும் காசி விஸ்வநாதர் கோயிலில் பிரார்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, வாரணாசியில் டாக்டர் சம்பூர்ணானந்த் விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு வளாகம் கட்டுவதற்கான பணிகள் குறித்து பிரதமர் மோடி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற உழவர் நல மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரை
June 18th, 05:32 pm
உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல் அவர்களே, முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் அவர்களே, எனது அமைச்சரவை சகாக்கள் சிவராஜ் சிங் சவுகான் அவர்களே, பகீரத் சவுத்ரி அவர்களே, உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா அவர்களே, மாநில அரசின் பிற அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, பெருந்திரளாக கூடியுள்ள எனது விவசாய சகோதர சகோதரிகளே, என் காசியின் குடும்ப உறுப்பினர்களே!உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்ற உழவர் நல நிதி உதவி வழங்கும் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
June 18th, 05:00 pm
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இன்று (18-06-2024) நடைபெற்ற உழவர் நல நிதி உதவித் திட்டத்தின் கீழ் நிதி விடுவிக்கும் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று, இத்திட்டத்தின் 17-வது தவணைத் தொகையை விடுவித்தார். சுமார் 9.26 கோடி விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.20,000 கோடிக்கும் அதிகமான தொகையை நேரடி பணப் பரிமாற்றம் மூலம் அவர் விடுவித்தார். நிகழ்ச்சியின் போது, சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேளாண் தோழிகள் (கிருஷி சகி) என்ற சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். நாடு முழுவதிலுமிருந்து விவசாயிகள் தொழில்நுட்பம் மூலம் இந்த நிகழ்ச்சியில் இணைந்தனர்.வாரணாசியில் வாக்காளர்களிடம் பிரதமர் மோடி உரையாற்றினார்
May 30th, 02:32 pm
பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசி வாக்காளர்களுடன் காணொலிச் செய்தி மூலம் உரையாடினார். இந்த நகரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது பாபா விஸ்வநாதரின் அளப்பரிய அருளாலும், காசி மக்களின் ஆசீர்வாதத்தாலும் மட்டுமே சாத்தியம் என்று தெரிவித்தார். புதிய காசியுடன் புதிய மற்றும் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தலைக் குறிப்பிட்ட பிரதமர், காசியில் வசிப்பவர்கள், குறிப்பாக இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள், ஜூன் 1-ம் தேதி சாதனை எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.PM Modi addresses Mahila Sammelan in Varanasi, Uttar Pradesh
May 21st, 05:30 pm
In a heartfelt address at the Mahila Sammelan in Varanasi, Prime Minister Narendra Modi reaffirmed his unwavering confidence in the people of Banaras and highlighted the significant strides his government has made towards women's empowerment and development over the past decade. PM Modi also urged the attendees to prioritize their health during the campaign period.Overwhelmed and filled with emotions, says PM as he holds a magnificent roadshow in Varanasi
May 13th, 10:04 pm
Varanasi offered an electrifying welcome to Prime Minister Narendra Modi during his spectacular roadshow in the city. The event commenced with the PM paying floral tributes at the statue of Pt. Madan Mohan Malaviya Ji.வாரணாசியில் ரூ.13,000 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
February 23rd, 02:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி வாரணாசியில் இன்று ரூ.13,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். வாரணாசி, கார்கியாவ்னில் உள்ள உப்சிடா வேளாண் பூங்காவில் கட்டப்பட்டுள்ள பனஸ்கந்தா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் நிறுவனத்தின் பால் பதப்படுத்தும் பிரிவான பனாஸ் காசி சங்குலையும் பார்வையிட்ட பிரதமர், பசு வளர்ப்பு பயனாளிகளுடன் கலந்துரையாடினார். வேலைவாய்ப்பு நியமனக் கடிதங்கள் மற்றும் புவிசார் குறியீடு அங்கீகரிக்கப்பட்ட பயனர் சான்றிதழ்களையும் பிரதமர் மோடி வழங்கினார். இன்றைய வளர்ச்சித் திட்டங்கள் சாலை, ரயில், விமானப் போக்குவரத்து, சுற்றுலா, கல்வி, சுகாதாரம், குடிநீர், நகர்ப்புற மேம்பாடு மற்றும் துப்புரவு போன்ற முக்கியமான துறைகளைப் பூர்த்தி செய்கின்றன.துறவி குரு ரவிதாஸின் 647-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 23rd, 12:39 pm
ரவிதாஸ் அவர்களின் ஜெயந்தி கொண்டாட்டங்களில் பங்கேற்க உங்களில் பலர் தொலைதூரத்திலிருந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, பஞ்சாபிலிருந்து ஏராளமான சகோதர சகோதரிகள் வருவதால், வாரணாசி 'மினி பஞ்சாப்' போல் காட்சியளிக்கிறது. இவை அனைத்தும் துறவி ரவிதாஸ் அவர்களின் அருளால் சாத்தியமாகியுள்ளது.வாரணாசியில் துறவி குரு ரவிதாசின் 647-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் உரை
February 23rd, 12:06 pm
வாரணாசியில் இன்று நடைபெற்ற துறவி குரு ரவிதாசின் 647-வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் அருகே சீர் கோவர்தன்புரில் உள்ள துறவி குரு ரவிதாஸ் பிறந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில், ரவிதாஸ் பூங்காவிற்கு அருகில் புதிதாக நிறுவப்பட்டுள்ள துறவி ரவிதாஸ் சிலையைப் பிரதமர் திறந்து வைத்தார். சுமார் ரூ.32 கோடி மதிப்புள்ள துறவி ரவிதாஸ் கோவிலைச் சுற்றி பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்த அவர், துறவி ரவிதாஸ் அருங்காட்சியகத்திற்கும் மற்றும் சுமார் ரூ.62 கோடி மதிப்பிலான பூங்காவை அழகுபடுத்தும் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார்.