தேர்வுக்கான கலந்துரையாடலின்போது, பிரதமர் மோடியிடம் ஒரு மாணவர், தங்களது ஆற்றலை எவ்வாறு இனங்கண்டு சரியான வாழ்க்கைத் தொழில் வழிமுறையைத் தேர்ந்தெடுப்பது என்று வினவினார். இந்த கேள்விக்குப் பதிலளித்த பிரதமர், உங்களைப் பற்றி தெரிந்து கொள்வது ஒரு கடினமான பணியாகும், நம்மைப் பற்றி நாம் அறிந்து கொள்வதற்கு ஒரே வழி, வசதியான வாழ்க்கை முறையிலிருந்து வெளியேறி, சவால் வழிக்கு செல்வதே என்று கூறினார்.
ஒரு வாரத்தில் செய்யும் பணிகளை குறித்து வைக்கும் பழக்கத்தை இளைஞர்கள் பராமரிக்க வேண்டும் என்று அறிவுரை கூறிய அவர், இது தங்களது தகுதி என்ன என்பதை அறிந்து கொள்ள மாணவர்களுக்கு உதவும் என்றார்.
எல்லோரும் செய்வதையே நாமும் பின்பற்றுவதை விடுத்து, மாணவர்கள் தங்கள் விருப்பத்திற்கும், தகுதிக்கும் பொருந்தும் ஒரு வாழ்க்கைப் பாதையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.