பாரதீய ஜனதாக் கட்சியில் சாதாரண இயக்க மனிதனாக இருந்த திரு.நரேந்திர மோடி இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகிகளின் ஒருவராக உயர்வடைந்த வரலாறு கடுமையானதும், தன்னம்பிக்கை நிறைந்ததாகும்.
2001, அக்டோபர், 2001 அன்று குஜராத்தின் முதலமைச்சராக திரு.நரேந்திர மோடி பதவியேற்றார். அரசியல் கட்சி பணியாளர் மற்றும் ஏற்பாட்டாளராக திகழ்ந்த அவர் விரைவாக நிர்வாகியாக மாற்றம் பெற்றதால், அப்பதவிக்கு தேவையான அரசை நடத்துவதற்கான பயிற்சியை பெறுவதற்கான நேரம் ஏதும் கிடைக்கவில்லை. பா.ஜ.க.-வில் நிலவிய எதிரான சூழ்நிலையாலும், பதவியேற்ற நாள் முதல் காணப்பட்ட ஒத்துழைக்காத அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே திரு.நரேந்திர மோடி, நிர்வாகத்தை நடத்த வேண்டியிருந்தது. அவரது சக கட்சியனரே, நிர்வாக அறிவற்ற ஒருவராக அவரை கருதினர். ஆனால் அவர் சவால்களை எதிர்கொண்டு உயர்ந்தார்.
முதல் 100 நாட்கள்
குஜராத்தின் முதலமைச்சராக பதவியேற்ற முதல் 100 நாட்கள் எவ்வாறு திரு.மோடி தமது பொறுப்புகளில் ஈடுபடுத்திக் கொண்டார் என்பதை வெளிப்படுத்தும் வண்ணம் இருந்ததுடன், நிர்வாக சீர்திருத்தத்தை பாரம்பரியமற்ற முறையில் மாற்றத்தை கொண்டு வரத் துவங்கியதுடன், பா.ஜ.க. -வின் நிலையை உலுக்கும் வண்ணம் யோசனைகளை அவர் முன்மொழிந்தார். அந்த 100 நாட்கள், நாங்கள் திரு.நரேந்திர மோடி, பூகம்ப பேரழிவிற்கு பின் கட்ச் பகுதியில் மறுவாழ்வு முயற்சிகளை துரிதப்படுத்தும் வகையில், குஜராத் உயர் அலுவலர்களிடமிருந்த நிர்வாக தாமதத்தை குறைக்கும் வகையில், எளிமையான நடைமுறைகளை கொண்டு வந்ததை கண்டோம்.
இந்த முதல் 100 நாட்கள் திரு.நரேந்திர மோடியின் கொள்கைகள் புரிந்துக் கொள்வதற்கான ஜன்னலை திறந்து வைத்தது – உதாரணமாக இருந்து, தேவையற்ற செலவுகளை நீக்குதல், சிறந்த கேட்பாளராகவும், விரைவாக கற்றுக்கொள்பவராகவும் திகழ்ந்தார். முதல் 100 நாட்கள் அவர் கொள்கை அமைப்புகள் மீது கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில், பெண் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளித்ததும், போட்டிகளை தவிர்த்து ஒருமித்த கருத்துடன் ஊக்கப்படுத்தும் வகையில் வளர்ச்சி நிதிகளை பெறுவதற்கான கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அமைந்தன.
இறுதியாக, ஆட்சிக்கு வந்த முதல் மூன்று மாதங்களில், அவர் மாநிலத்தில் மக்களுக்கு அதிகாரம் அளித்து அவர்களையும் அரசாட்சியில் பங்கேற்க வைத்தார். தீபாவளியையொட்டி அவர், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் தங்கியிருந்து, நிவாரண பணிகளை இலக்காக கொண்டு செயல்படுத்தினார். வளர்ச்சி மற்றும் நல்ல அரசாட்சி அரசியல் மீது தீவிர கவனம் செலுத்தியதன் மூலம் குஜராத்தை நெருக்கடியில் இருந்து மீளச் செய்து மாற்றத்தை ஏற்படுத்தி காட்டினார்.
வளர்ச்சி மற்றும் அரசாட்சியின் உதாரணமாக வலிமையான குஜராத்தை உருவாக்க நினைத்த திரு.நரேந்திர மோடியின் பாதை எளிதாக இருக்கவில்லை. அப்பாதை, இயற்கையான மற்றும் உள்கட்சியினர் உள்ளிட்ட மனிதர்களால் உருவாக்கப்பட்ட, துயரங்கள், சவால்கள் நிறைந்து இருந்தது. ஆனால் அவரது உறுதியான தலைமைப்பண்பு, கடினமான தருணங்களில் அவருக்கு உதவியாக இருந்தன. அதிகார சீர்திருத்தப் பணியை மேற்கொள்வதற்கு முன்பாகவே, 2002-ல் நடைபெற்ற நிகழ்வுகள் திரு.நரேந்திர மோடியை மிகவும் சோதித்தன.
எதிர்பாராத உயிரிழப்புடன், மீண்டு வருவதில் குஜராத்தின் திறன் மீதான நம்பிக்கையிழப்பு, சாதாரண மனிதனாக இருப்பின் தனது பொறுப்புக்களில் இருந்து நழுவும் வகையில் பதவி விலகியிருப்பார். ஆனால், திரு.நரேந்திர மோடி மாறுப்பட்ட தார்மீக மனிதராக இருந்தார். அவர் தேசிய மற்றும் பன்னாட்டு ஊடகங்களின் கடும் விமர்சனங்களையும் அதே நேரத்தில் அரசியல் எதிரிகளின் அழுத்தங்களையும் எதிர்கொண்டு, தமது நோக்கமான நல்ல அரசாட்சியின் இலக்கை நோக்கி செயல்பட்டார்.
இறுதியாக அங்கு ஒளி தெரிந்தது : ஜோதி கிராம் திட்டம்
மோசமான அரசியல் சூழ்நிலை வலுவலான தலைமைப் பண்பு மூலம் திரு.நரேந்திர மோடி எதிர்கொண்டதற்கு, குஜராத்தின் எரிசக்தி துறையில் ஜோதி கிராம் திட்டம் சிறந்த உதாரணமாகும். அதன் நோக்கம் குஜராத் முழுதும், பெருநகரங்கள் முதல் தொலைத்தூர மலைவாழ் கிராமங்கள் வரையில் 24x7 மின்சாரம் அளிப்பதே புரட்சிகர யோசனையான ஜோதி கிராமம் ஆகும்.
விவசாயிகள் உடனடியாக இத்திட்டத்திற்கு எதிராக கிளம்பினர். விவசாய இயக்கங்கள் பல்வேறு அழுத்தங்களை கொடுத்தபோதும், திரு.நரேந்திர மோடி தனது பார்வையில் உறுதியாக இருந்து 24x7 மின்சாரத்தை அளித்ததால், ஜோதி கிராம் மாநிலம் முழுதும் வெற்றி பெற்றது. ஜோதி கிராம் மூலம் திரு.நரேந்திர மோடி, தனது வலுவலான தலைமை பண்புடன் கூடிய நல்லரசாட்சி, சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் மாற்றங்களை ஏற்படுத்த இயலும் என்பதை வெளிப்படுத்தினார். நாளது வரை, அவரது முக்கிய குறிக்கோளாக உள்ளது – “சப்கா சாத், சப்கா விகாஸ்” (அனைவரும் ஒன்றுபடுவோம் அனைவரும் முன்னேறுவோம்).
அரசியலை தாண்டிய அரசு
அரசியலைவிட அரசாட்சி மிக முக்கியமானது என திரு. நரேந்திர மோடி எப்போதும் நம்பினார். வளர்ச்சிக்கான சவால்களுக்கு தீர்வு காண்பதற்கு அரசியல் வேறுபாடுகள் தடையாக இருக்க அவர் எப்போதும் இடமளிக்கவில்லை. சர்தார் சரோவர் திட்டம் நிறைவேற்றியதன் மூலம் குஜராத்தில் நர்மதா நதி பாய்வதை உறுதி செய்தது, ஒருமித்த மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை எவ்வாறு திறம்பட நிர்வகித்து நல்ல அரசாட்சி மேற்கொண்டார் என்பதை வெளிபடுத்தியது.
தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் அரிதாக காணப்படும் வகையில், காங்கிரஸ் ஆண்ட அண்டை மாநிலங்களான மகராஷ்டிரா மற்றும் மத்திய பிரதேச முதலமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி திட்டத்தை வெற்றிகரமாக திரு.மோடி நிறைவேற்றினார்.
குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் நீர் மேலாண்மையை பரவலாக்கியதன் மூலம் திரு.மோடி, பெரும் திட்டங்களை உருவாக்குவது மட்டுமல்லாது, அது கடை மடை பகுதி வரை சென்றடைவதை உறுதிசெய்வது அரசின் கடமை என்பதை வெளிப்படுத்தினார்.
முன்னேற்றத்திற்கு மிக அருகாமையில்
கடந்த பத்தாண்டுகளில் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் அவற்றை கடை மடைப் பகுதி வரை உரிய முறையில் சென்றடைவதை உறுதி செய்வதற்கான அவரது முயற்சிகள் திரு.நரேந்திர மோடியின் கவனத்தை விவரித்தது.
பூகோள விவரம் அடங்கிய வரைபடம் முதல் மின்னணு-நீதிமன்றங்கள் வரையிலும், , சுவாகத் மற்றும் ஒரு நாள் அரசாட்சி போன்ற திட்டங்கள் மூலம் குடிமக்கள்-அரசு இடையேயான உறவிலும் தொழில்நுட்பத்தை புதுமையான முறையில் பயன்படுத்தியது சான்றாக விளங்கியது.
கிராமங்களை அணுகும் வண்ணம், வட்ட அளவில் வளர்ச்சிக்கான திட்டமிடல் மற்றும் அரசாட்சியை ஏ.டி.வி.டி திட்டத்தின் மூலம் கொண்டு சென்றதன் மூலம் அவரது பரவலாக்க முயற்சிகள் வெளிப்படுத்தின. ஒற்றைச் சாளர முறையின் மூலம் தொழிற்சாலைகள் எவ்வாறு பயனடைந்தன என்பதற்கு திரு.மோடி அதிக “சட்டங்களை” இயற்றுவதற்கு பதிலாக உயர்மட்ட “நடவடிக்கைகள்” மீது கொண்டிருந்த நம்பிக்கையை வெளிப்படுத்தியதுடன், சுற்றுச்சூழல் அனுமதியிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் திறனையும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தினார்.
வெற்றிக்கான 3 தூண்கள்
விவசாயம், தொழிற்சாலை மற்றும் சேவைகள் ஆகிய மூன்று தூண்கள் மூலம் திரு.நரேந்திர மோடி குஜராத்தின் வெற்றிக் கதையை உருவாக்கினார். அவரது பதவிக்காலத்தில், வறட்சி மாநிலமாக அறியப்பட்ட குஜராத், விவசாயத்தில் 10% அதிகமான வளர்ச்சியை கண்டது. கிரிஷி மகோத்சவ் போன்ற திட்டங்கள் மாநிலத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வில் மாற்றத்தை உருவாக்கியது. இரு வருடங்களுக்கு ஒருமுறை வலிமையான குஜராத் மாநாடு, குஜராத்திற்கு சாதனைமிக்க முதலீடுகளைக் கொண்டு வந்ததுடன், மாநிலத்தில் வேலைவாய்ப்பினை அதிகரித்தது. அவரது தலைமையின் கீழ் குஜராத் நடுத்தர மற்றும் சிறு-தொழில்துறைகளுக்கு சொர்க்கமாக விளங்கின.
நிறுவனங்களின் முக்கியத்துவம்
திரு.நரேந்திர மோடியின் சிறந்த நிர்வாகித் திறன் இருமுறை சோதனைக்குள்ளாக்கப்பட்டது. 2006-ல் சூரத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் ஒருமுறையும், மற்றும் மீண்டும் 2008-ல் குஜராத்தில் உள்ள பல்வேறு நகரங்களை தீவிரவாதிகள் தாக்குதல்கள். இரு நிகழ்வுகளிலும், திரு.மோடி நிறுவனங்களில் கடைபிடித்த சிறந்த முறைகள் மாறுபாட்டை நிகழ்த்தின.
2001-201 கட்ச் பகுதியில் மேற்கொண்ட நிவாரண முயற்சிகள் காரணமாக பேரழிவு மேலாண்மை மீதான நிறுவன அணுகுமுறை, இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின்போதும் உத்தர்காண்டில் ஏற்பட்ட வெள்ளத்தின்போதும் கைகொடுத்தன.
திரு.நரேந்திர மோடியின் கண்காணிப்பில் சட்டத்தை செயல்படுத்துதல் குறித்த நிறுவன அணுகுமுறை, 2008-ல் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புகள், துரித காலத்தில் குஜராத் காவல்துறையால் தீர்க்கப்பட்டது. நிர்வாகம் மற்றும் அரசாட்சியில் நிறுவன தத்துவமே, உண்மையான ஒரு தலைவர் விட்டு செல்லும் முக்கிய தடமாகும். அதில் திரு.மோடியின் புரட்சிகர சிந்தனைகள், எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய பெட்ரோலியம் பல்கலைக்கழகம் ஏற்படுத்தியது முதல் உள்நாட்டு பாதுகாப்பிற்கு தடய மற்றும் பாதுகாப்பு பல்கலைக்கழகம் வரை பல்வேறு நிறுவனங்களை உருவாக்கியது.
நல்ல அரசாட்சி என்பது தற்போதைய பிரச்சினைகளுக்கு மட்டும் தீர்வு காண்பது மட்டுமல்ல, நாளைய சவால்களை எதிர்நோக்கி தயாராக இருப்பதாகும் என்ற அவரது உறுதியான நம்பிக்கை திரு.மோடியின் நிறுவன தத்துவத்தை வெளிப்படுத்தியது.
ஒருமுகப்படுத்துதலில் நம்பிக்கையாளர்
திரு.நரேந்திர மோடி இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக பொறுப்பேற்க உள்ள நிலையில், நிர்வாகம் மற்றும் அரசாட்சி குறித்த அவரது அணுகுமுறை, அவற்றை ஒருமுகப்படுத்துதல் சிந்தனையாக உருவெடுத்தது. திரு.மோடியின் “குறைந்த அரசு, தலையீடு கூடுதல் அரசாட்சி”. தத்துவம், பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு இடையே இருந்த தடைகளை அகற்றி பங்கேற்பு இயக்கமாக ஒருமுகப்படுத்தப்பட்ட அரசு செயல்களான பஞ்சா-அம்ருத் உருவாக்கம் விளங்குகிறது.
திரு.மோடியின் கூற்றின்படி, இந்திய அரசின் முக்கிய சவால்கள், ஒருமுகப்படுத்தப்பட்ட சிந்தனை மற்றும் செயல்படுத்துதலில் ஒருங்கிணைந்த அணுகுமுறையாகும். பல்வேறு வருடங்களாக திரு.மோடியின் பல்வேறு முயற்சிகள் – மரபுசாரா எரிசக்தி ஆதாரங்கள் உருவாக்குவது முதல் அடுத்த தலைமுறைக்கான நகர உள்கட்டமைப்பு வரை – நிர்வாகம் மற்றும் அரசாட்சியின் ஒருமுகப்படுத்துதலில் காணலாம். இந்த ஒருமுகப்படுத்துதல் வருங்காலங்களுக்கு இந்தியாவிற்கு நன்மை விளைவிக்கும்.
2001 முதல் 2013 வரை, அரசாட்சியின் சிறந்த செயல்படுத்துபவராக திரு.நரேந்திர மோடி உயர்ந்துள்ளது, அவரது அரசு தேசிய மற்றும் பன்னாட்டு ஊடகங்களிடமிருந்து பெற்ற பல விருதுகளே சான்றாக விளங்குகின்றன.
சான்றுகள்
“ஒவ்வொருவரும் திரு.மோடி வலுவான தலைவர் மற்றும் சிறந்த நிர்வாகி என அறிவார்கள். அவருக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும். அவரது எதிர்காலத்திற்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் இந்தியாவிற்கான அவரது கனவுகள் மற்றும் திட்டங்கள் நனவாகும் என நம்புகிறேன்” – ரஜினிகாந்த், சூப்பர் ஸ்டார்.
“நான் திரு.நரேந்திர மோடியை சந்தித்தேன், அவர் நல்ல மனிதராக விளங்குகிறார், அவர் குஜராத்திற்கு நற்பணிகளை ஆற்றியுள்ளார்” – ஸ்ரீ ரவி சங்கர் ஜி, ஆன்மிக தலைவர் மற்றும் வாழும் கலை அமைப்பின் நிறுவனர்
“திரு.நரேந்திர மோடி எனது சகோதரர் போன்றவர், அனைவரும் அவர் பிரதம மந்திரியாக வருவதை விரும்புகிறோம். இந்த தீபாவளி திருநாளில், நமது விருப்பங்கள் நனவாகும் என நம்புகிறேன்” – திருமதி. லதா மங்கேஷ்கர், புகழ்பெற்ற பாடகி
“தற்போது நாட்டிற்கு நேர்மையான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். ஒரே வார்த்தையில், நமக்கு திரு.நரேந்திர மோடி தேவை” – திரு, அருண் ஷோரி, பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர்
“தற்போதைய சூழலில் கடவுளால் நமக்கு அனுப்பப்பட்டவர் திரு.நரேந்திர மோடி. அவர் அடுத்த பிரதம மந்திரி ஆவார். அவர் நாட்டிற்கு புகழைக் கொண்டு வருவார்” – திரு, சோ ராமசாமி, ஆசிரியர், “துக்ளக்”
நாட்டின் 14வது பிரதம மந்திரியான திரு.நரேந்திர மோடி தன்னுடன் உயர்மட்ட மற்றும் நேரிடை அனுபவங்களை கொண்டு வந்துள்ளதுடன், இந்தியாவின் முக்கிய வெற்றிகரமான முதலமைச்சர்களில் ஒருவராகவும், சிறந்த நிர்வாகிகளில் ஒருவராகவும் உள்ளார்.