பிரதமர் நரேந்திர மோடியின் நீடித்த ஆதரவும் பாராட்டும் நாட்டிற்கு கூடுதலாக செயல்பட தமக்கு எவ்வாறு ஊக்கமளித்தன என்பது பற்றி பி.வி.சிந்து ஒரு வீடியோவில் நினைவு கூர்ந்துள்ளார். 2021-ன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்பும் பின்பும் அதேபோல் பத்ம பூஷன் விருது பெற்ற போதும் பிரதமர் மோடியுடனான சந்திப்பை அவர் நினைவு கூர்ந்துள்ளார். இவை தமக்கு மிகவும் பசுமையாக நினைவில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“நாட்டிற்காக உண்மையிலேயே நீங்கள் நல்லது செய்திருக்கிறீர்கள்” என்று கூறி தம்மைப் பிரதமர் மோடி பாராட்டியதாக சி்ந்து கூறியுள்ளார். விளையாட்டு ஆளுமைகள் பதக்கங்கள் பெறும்போது பிரதமரிடமிருந்து கிடைக்கும் பாராட்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தும் என்று அவர் மேலும் கூறினார். இளைஞர்களை ஊக்கப்படுத்துமாறு விளையாட்டு ஆளுமைகளை பிரதமர் மோடி வலியுறுத்தியதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
“பிரதமர் மோடி ஒரு தலைவர் என்பதைவிடவும் மேலானவர். விளையாட்டுகள் குறித்த அவரது தொலைநோக்கு மிகவும் உயர்வானது. அவர் எதைக் கூறினாலும் அவர் சொல்கின்ற முறையால்… நாம் அதை செய்துவிடுவோம், நம்மால் அதை செய்யமுடியும்… ஊக்கப்படுத்துவதும், பயிற்றுவிப்பதும் மிகப்பெரிய விஷயம். ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்வதற்கு முன்னால் விளையாட்டு ஆளுமைகள் அனைவருடனும் இணையம் வழியாக அவர் உரையாடினார். அவரது பேச்சு எங்களுக்கு ஏராளமான நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளித்தது. எங்களை அவர் ஊக்கப்படுத்திய முறை பல விஷயங்களை கற்றுத்தந்தது. ஏனெனில் ஒரு நிகழ்வுக்கு முன் இத்தகைய ஊக்குவிக்கும் பேச்சு மிகப்பெரிய விஷயமாகும்” என்று அவர் கூறினார்.
#ModiStory
— Modi Story (@themodistory) March 27, 2022
"Not just another leader!"
This is what @pvsindhu1 had to say about PM Narendra Modi. She talks about how the constant support & appreciation from PM inspires her for doing more.
Congratulations to #PVSindhu on winning #SwissOpen2022.https://t.co/9iulCarBhp pic.twitter.com/VBeKFuVKqF
பொறுப்புத்துறப்பு:
பிரதமர் திரு நரேந்திர மோடி குறித்த & மக்கள் வாழ்க்கையில் அவரின் தாக்கம் குறித்து மக்களின் நினைவுகள் / கருத்து / ஆய்வு ஆகியவற்றை நினைவுபடுத்த அல்லது தொகுத்துரைப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக இது உள்ளது.