உத்தராகண்ட் நிறுவன தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் செழுமைக்கு தேவபூமியான உத்தராகண்ட் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியுள்ளது என்று திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;
“தேவபூமியான உத்தராகண்ட் இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் செழுமைக்கு விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கியுள்ளது. இயற்கை சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற இந்த மாநிலத்தைச் சேர்ந்த எனது குடும்பத்தினர் அனைவரும் மிகவும் கடின உழைப்பாளிகள் என்பதுடன் மிகவும் துணிச்சலானவர்களும் ஆவர். இன்று மாநிலத்தின் நிறுவன நாளில் அம்மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
भारतीय संस्कृति और परंपरा की समृद्धि में देवभूमि उत्तराखंड का अमूल्य योगदान है। प्राकृतिक पर्यटन के लिए प्रसिद्ध इस प्रदेश के मेरे सभी परिवारजन अत्यंत परिश्रमी होने के साथ-साथ बेहद पराक्रमी भी हैं। आज राज्य के स्थापना दिवस पर उन्हें मेरी बहुत-बहुत शुभकामनाएं।
— Narendra Modi (@narendramodi) November 9, 2023