ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நேரிட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் திரு மோடி அறிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
"ராஜஸ்தான் மாநிலம் சிகாரில் நேரிட்ட பேருந்து விபத்து மனதை வலிக்கச்செய்கிறது. இதில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வலியை தாங்கும் சக்தியை கடவுள் அவர்களுக்கு வழங்கட்டும். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று தெரிவித்துள்ளார். மாநில அரசின் மேற்பார்வையில் உள்ளாட்சி நிர்வாகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து உதவிகளிலும் ஈடுபட்டுள்ளது: பிரதமர் @narendramodi
राजस्थान के सीकर में हुआ बस हादसा हृदयविदारक है। इसमें जान गंवाने वालों के परिजनों के प्रति मेरी गहरी शोक-संवेदनाएं। ईश्वर उन्हें इस पीड़ा को सहने का संबल प्रदान करे। इसके साथ ही मैं सभी घायलों के शीघ्र स्वस्थ होने की कामना करता हूं। राज्य सरकार की देखरेख में स्थानीय प्रशासन…
— PMO India (@PMOIndia) October 29, 2024
ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் நேரிட்ட இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Sikar, Rajasthan. The injured would be given Rs. 50,000. https://t.co/XJgKUGzYHd
— PMO India (@PMOIndia) October 29, 2024