பிரதமர் திரு நரேந்திர மோடி, எகிப்து அதிபர் மேதகு அப்தெல் ஃபத்தா எல்-சிசியுடன் இன்று தொலைபேசியில் உரையாடினார்.
மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலைமை மற்றும் பிராந்தியத்திலும், உலகிலும் அதன் தாக்கங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பயங்கரவாதம், வன்முறை மற்றும் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்து இரு தலைவர்களும் தங்கள் கவலையை வெளிப்படுத்தினர்.
இஸ்ரேல்-பாலஸ்தீனம் பிரச்சினையில் இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார்.
பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் வளர்ச்சி கூட்டாண்மை மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்.
அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவில் மீட்டெடுப்பது மற்றும் மனிதாபிமான உதவிகளை எளிதாக்குவதன் அவசியம் குறித்து இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.