ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில், பகவான் ஹனுமனின் இரக்க குணம் மற்றும் அர்ப்பணிப்பை நினைவுகூரும் தினமே ஹனுமன் ஜெயந்தி என்னும் புனித நாளாகும் என்று கூறியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் அவரது ஆசீர்வாதங்களைக் கோரிய பிரதமர், ஹனுமனின் வாழ்க்கையும், கொள்கைகளும் தொடர்ந்து நம் அனைவருக்கும் ஊக்கமளிக்க வேண்டும் என்று தாம் விரும்புவதாகக் கூறினார்.
हनुमान जयंती का पावन अवसर भगवान हनुमान की करुणा और समर्पण भाव को याद करने का दिन है। मेरी कामना है कि कोरोना महामारी के खिलाफ जारी लड़ाई में निरंतर उनका आशीर्वाद प्राप्त होता रहे। साथ ही उनके जीवन और आदर्शों से हमेशा प्रेरणा मिलती रहे।
— Narendra Modi (@narendramodi) April 27, 2021