கொவிட்-19 பெருந்தொற்று உலகம் முழுவதிலும் உள்ள அரசுகளின் கொள்கை வகுப்பதில் புதுவிதமான சவால்களுடன் வந்துள்ளது. இதில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. மக்கள் நலனுக்கான போதுமான ஆதாரங்களை, நிலைத்தன்மையை உறுதி செய்வதுடன் உருவாக்குவது மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும்.
உலகம் முழுவதும் நிலவும் நிதிப்பற்றாக்குறையின் பின்னணியிலும், இந்திய மாநிலங்கள் 2020-21-ல் குறிப்பிடத்தக்க அளவுக்கு கூடுதலாக கடன் பெற முடிந்துள்ளது குறித்து நீங்கள் அறிவீர்களா? மாநிலங்கள் ரூ.1.06 லட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக கடன் பெற்றிருப்பது உங்களுக்கு வியப்பாக இருக்கக்கூடும். மத்திய-மாநில உறவுகள் குறித்த அணுகுமுறையால், இந்தக் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு ஏற்பட்டுள்ளது.
கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வது தொடர்பாக, நமது பொருளாதாரத்தை வகுத்தபோது, எல்லோருக்கும் ஒரே மாதிரி அளவு என்ற மாதிரியில் நமது தீர்வுகள் இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என நாம் விரும்பினோம். கண்டத்துக்கான பரிமாணங்களுடன் கூடிய கூட்டாட்சி நாட்டுக்கு, தேசிய அளவில் கொள்கை வகுத்து, மாநிலங்கள் சீர்திருத்தங்களை மேம்படுத்த வேண்டும் என்பது சவாலான காரியமாகும். ஆனால், நமது கூட்டாட்சி அரசியலில் நமக்கு நம்பிக்கை இருந்ததால், மத்திய-மாநில உறவுகளின் எழுச்சியை நாம் முன்னெடுத்து வருகிறோம்.
2020 மே மாதத்தில், தற்சார்பு இந்தியா தொகுப்பின் ஒரு பகுதியாக, 2020-21-ம் ஆண்டுக்கு மாநில அரசுகள் வாங்கும் கடன் அளவை அதிகரிக்க அனுமதிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஜிஎஸ்டிபியில் கூடுதலாக 2% அளவுக்கு கடன் பெற அனுமதிக்கப்பட்டது. அதில் ஒரு சதவீதம் அளவுக்கு, சில பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்தியாவின் பொதுநிதித் திட்டத்தில் இந்த சீர்திருத்த நடவடிக்கை அரிதானதாகும். கூடுதல் நிதி பெறுவதற்கு முற்போக்கான கொள்கைகளை மாநிலங்கள் மேற்கொள்வதற்கு இது ஊக்குவிப்பாகும். இந்த நடவடிக்கையின் பலன் ஊக்கமளிப்பதாக மட்டும் இல்லாமல், வலுவான பொருளாதார கொள்கைகளுக்கு ஓரளவுக்கே வரவேற்பு இருக்கும் என்ற கருத்திற்கு மாறாக அமைந்தது.
கூடுதல் கடன் பெறுவதற்கான நான்கு சீர்திருத்தங்கள் (ஜிடிபி-யில் 0.25% ஒவ்வொன்றுடன் இணைந்தது) இரண்டுவிதமான அம்சங்களைக் கொண்டதாகும். முதலாவதாக, மக்களுக்கு குறிப்பாக ஏழைகள், பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புள்ளோர், நடுத்தர மக்களுக்கு எளிதான வாழ்க்கையை முன்னேற்றுவதுடன் ஒவ்வொரு சீர்திருத்தமும் இணைந்ததாகும். இரண்டாவதாக, அவை நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தியுள்ளன.
‘ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை’ திட்டத்தின் கீழ் வரும் முதலாவது சீர்திருத்த கொள்கை, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள மாநிலத்தின் அனைத்து ரேசன் அட்டைகளும், அனைத்து குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும், அனைத்து நியாய விலைக் கடைகளிலும் மின்னணு விற்பனை கருவிகள் உள்ளன என்பதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்பதாகும். புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் நியாய விலைக் கடைகளில் உணவுப் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். மக்களுக்கு இந்தப் பயன்கள் கிட்டுவதுடன், போலி உறுப்பினர்கள் மற்றும் போலி அட்டைகள் நீக்கப்படும் என்ற நிதிப்பயனும் இதில் உள்ளது. 17 மாநிலங்கள் இந்தச் சீர்திருத்தத்தை நிறைவு செய்துள்ளன. அவை கூடுதலாக, ரூ.37,600 கோடி கடன் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சீர்திருத்தம், எளிதாக தொழில் செய்வதை நோக்கமாகக் கொண்டதாகும். 7 சட்டங்களின் கீழ், தொழில் தொடர்பான உரிமங்களை புதுப்பிப்பதை மாநிலங்கள் உறுதி செய்ய வேண்டும். கணினிமயமாக்கப்பட்ட தோராயமான சோதனை மற்றொரு தேவையாகும். சோதனை குறித்து முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கப்படுவது துன்புறுத்தலையும், ஊழலையும் மேலும் 12 சட்டங்களின் கீழ் குறைப்பதாக அமையும். இந்த சீர்திருத்தம் (19 சட்டங்களைக் கொண்ட) ‘ஆய்வு ராஜ்யத்தின்’ பெரும் சுமையால் பாதிப்புக்குள்ளான குறு, சிறு தொழில்களுக்கு உதவும். இது மேம்படுத்தப்பட்ட முதலீட்டு சூழல், பெருமளவு முதலீடு, விரைவான வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்தும். 20 மாநிலங்கள் இந்தச் சீர்திருத்தத்தை மேற்கொண்டுள்ளன. இதன் மூலம், அவை கூடுதலாக ரூ. 39,521 கோடி கடன் பெற அனுமதிக்கபட்டுள்ளன.
15-வது நிதி ஆணையம் மற்றும் பல்வேறு அகடமிகள் வலுவான சொத்து வரிவிதிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளன. மூன்றாவது சீர்திருத்தம், மாநிலங்கள் நகர்ப்புறப் பகுதிகளில், சொத்து பரிவர்த்தனைக்கு, சொத்து வரி, தண்ணீர் மற்றும் கழிவு நீர் அகற்றலுக்கான கட்டண விகிதங்களை, முத்திரைத்தாள் மதிப்பு, வழிகாட்டு மதிப்பு அடிப்படையில் அறிவிக்க வேண்டும். இது நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தரப் பிரிவினருக்கு தரமான சேவைகள் கிடைக்க வழிவகுக்கும். மேலும், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு இது வழிவகுக்கும். சொத்து வரியும் முற்போக்கான விஷயமாகும். இதனால், நகர்ப்புற ஏழை மக்கள் பெரிதும் பயனடைவர். இந்தச் சீர்திருத்தம், கட்டணங்களை தாமதமாகச் செலுத்துவதை எதிர்கொள்ளும் நகராட்சி ஊழியர்களுக்கும் பயனளிக்கும். 11 மாநிலங்கள் இந்தச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. அவை கூடுதலாக, ரூ.15,957 கோடி கடன் பெற அனுமதிக்கப்பட்டுள்ளன.
நான்காவது சீர்திருத்தம், இலவச மின்சாரத்துக்குப் பதிலாக, நேரடி பயன் பரிமாற்றத்தை அமல்படுத்துவதாகும். ஒரு மாவட்டத்தில் பரிசோதனை அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும். கூடுதலாக ஜிஎஸ்டிபி-யில் 0.15% கடன் பெறுவது இதனுடன் தொடர்புடையதாகும். தொழில்நுட்ப, வணிக இலக்குகளுக்கு தள்ளுபடி அம்சமும் இதில் உள்ளது. வருவாய்க்கும் செலவுக்கும் இடையிலான இடைவெளியைக் (ஜிஎஸ்டிபி-யில் தலா 0.05%) குறைக்க இது வழங்கப்படும். இது விநியோக நிறுவனங்களின் நிதி நிலையை முன்னேற்றுவதுடன், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சேமிப்பை மேம்படுத்தி, சிறப்பான நிதி மற்றும் தொழில்நுட்ப திறன் வழியாக தரமான சேவை வழங்க வழிவகுக்கும். இந்த விஷயத்தை ஆறு மாநிலங்கள் ஒப்புக் கொண்டு, ரூ.13,201 கோடி கூடுதல் கடன் பெற அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக, ரூ.2.14 லட்சம் கோடி வாய்ப்பில், 23 மாநிலங்கள் கூடுதலாக ரூ.1.06 லட்சம் கோடி கடன் பெற்றுள்ளன. இதன் பயனாக, 2020-21-ம் ஆண்டில் மாநிலங்களுக்கான மொத்த கடன் அனுமதி மதிப்பிடப்பட்ட ஜிஎஸ்டிபி-யில் 4.5% ஆகும்.
சிக்கலான சவால்களைக் கொண்ட நம்மைப் போன்ற பெரிய நாட்டுக்கு, இது ஒரு தனித்துவமான அனுபவம் ஆகும். பல காரணங்களுக்காக திட்டங்களும், சீர்திருத்தங்களும் பல ஆண்டுகளாக செயல்படாமல் இருந்ததை நாம் அடிக்கடி கண்டுள்ளோம். பெருந்தொற்றுக்கு இடையிலும், மிகக்குறுகிய காலத்தில் மத்திய, மாநில அரசுகள் இணைந்து கடந்த கால அனுபவத்திலிருந்து விடுப்பட்டு, மக்கள் நலனுக்கான சீர்திருத்தங்களை மேற்கொண்டிருப்பது, மகிழ்ச்சியான விஷயமாகும். சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ் என்னும் நமது அணுகுமுறையால் இது சாத்தியமாயிற்று. இந்தச் சீர்திருத்தங்கள் தொடர்பாக பணியாற்றும் அதிகாரிகள், இந்த கூடுதல் நிதி ஊக்குவிப்பு இல்லையெனில், கொள்கைகளை செயல்படுத்த பல ஆண்டுகள் ஆகும் எனக் கூறுகின்றனர். கட்டாயத்தின் காரணமாக இந்தியா இந்த மாதிரி சீர்திருத்தங்களைக் கண்டுள்ளது. நம்பிக்கை மற்றும் ஊக்குவிப்பு காரணமாக இந்த புதிய மாதிரி சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மக்களின் நலனுக்காக, இந்த நெருக்கடியான காலத்திலும், இதைச் செயல்படுத்தியுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். 130 கோடி இந்தியர்களின் அபரிமிதமான முன்னேற்றத்துக்காக நாம் ஒன்றிணைந்து தொடர்ந்து பணியாற்றுவோம்.