பீகார் தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது வளமான வரலாறு மற்றும் உயிர்ப்பு மிக்க கலாச்சாரத்திற்காக பீகார் மாநிலம் பிரசித்தி பெற்றுள்ளது என்று அவர் கூறினார். தேசிய அளவில் அனைத்துப் பிரிவுகளிலும் தங்களது பங்களிப்பை வழங்கி வரும் பீகார் மாநில மக்கள், தங்களது கடின உழைப்பு மற்றும் உறுதிப்பாட்டினால் தங்களுக்கென ஒரு சிறப்பு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:
“பீகார் தினத்தை முன்னிட்டு அம்மாநில சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்! தனது வளமான வரலாறு மற்றும் துடிப்பான கலாச்சாரத்திற்குப் பிரசித்தி பெற்றுள்ள அம்மாநிலத்தின் மக்கள், நாட்டு வளர்ச்சியின் ஒவ்வொரு துறையிலும் ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்கி வருகிறார்கள். தங்களது உறுதிப்பாடு மற்றும் கடின உழைப்பினால் தங்களுக்கென்று முக்கிய இடத்தை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.”
बिहार दिवस पर राज्य के अपने सभी भाई-बहनों को बहुत-बहुत बधाई! अपने समृद्ध इतिहास और जीवंत संस्कृति के लिए प्रसिद्ध बिहार के लोग देश के विकास के लिए हर क्षेत्र में अतुलनीय योगदान दे रहे हैं। अपनी लगन और कठिन परिश्रम से उन्होंने एक विशेष पहचान बनाई है।
— Narendra Modi (@narendramodi) March 22, 2023