பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (2023 டிசம்பர் 1) துபாயில் நடைபெற்ற ஐநா பருவ நிலை (சிஓபி 28) உச்சிமாநாட்டின்போது இஸ்ரேல் நாட்டின் அதிபர் திரு ஐசக் ஹெர்சாக்-ஐ சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த பிராந்தியத்தில் நடந்து வரும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதல் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். அக்டோபர் 7 அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிர்ரிழப்புகளுக்கு தமது இரங்கலை பிரதமர் தெரிவித்தார். பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டதைப் பிரதமர் வரவேற்றார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தை மூலம் இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சினைக்கு விரைவான மற்றும் நிலையான தீர்வு காண இந்தியா ஆதரவு வழங்கும் என்று கூறினார்.
இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்தின் வெற்றிக்காக இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக், பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் தொடங்கப்படுவதற்கு வரவேற்புத் தெரிவித்தார்.