அமெரிக்க அதிபர் திரு. ஜோசப் ஆர். பிடனுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இந்தியா-அமெரிக்கா இடையேயான விரிவான உலகளாவிய மூலோபாய கூட்டாண்மை மேலும் வலுப்படுவது குறித்த தங்களது திருப்தியை பிரதமர் மோடியும் அதிபர் பிடனும் வெளிப்படுத்தினர். இது அனைத்து துறைகளிலும் வலுவான வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரு நாடுகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ள ஏர் இந்தியா மற்றும் போயிங் இடையேயான முக்கிய ஒப்பந்தத்தை இரு தலைவர்களும் வரவேற்றனர். இந்தியாவில் விரிவடைந்து வரும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறையால் ஏற்படும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு போயிங் மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார்
இரு நாடுகளிலும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவும் பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பின் சிறந்த எடுத்துக்காட்டுக்காக உள்ள ஏர் இந்தியா மற்றும் போயிங் இடையேயான முக்கிய ஒப்பந்தத்தை தலைவர்கள் வரவேற்றனர். இரு நாடுகளுக்கும் இடையிலான துடிப்பான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் மக்களிடையேயான உறவுகளை வலுப்படுத்த தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இந்தியாவின் தற்போதைய ஜி 20 தலைமையின் போது அதன் வெற்றியை உறுதி செய்வதற்காக தொடர்ந்து தொடர்பில் இருக்க தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.