சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் மற்றும் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். சுவாமி விவேகானந்தர் குறித்த தனது கருத்துகளின் காணொலிஇயையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"உலக அரங்கில் இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தை நிறுவிய சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான தேசிய இளைஞர் தினத்தில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். ஆற்றலும், உற்சாகமும் நிறைந்த அவரது எண்ணங்களும், செய்திகளும் காலங்காலமாக இளைஞர்களை ஊக்குவிக்கும்."
भारतीय अध्यात्म और संस्कृति को वैश्विक पटल पर स्थापित करने वाले स्वामी विवेकानंद को उनकी जन्म-जयंती, राष्ट्रीय युवा दिवस के अवसर पर शत-शत नमन। ऊर्जा और स्फूर्ति से परिपूर्ण उनके विचार और संदेश युग-युगांतर तक युवाओं को कुछ कर गुजरने के लिए प्रेरित करते रहेंगे। pic.twitter.com/4TfuLBiKLn
— Narendra Modi (@narendramodi) January 12, 2024