சோம்நாத் அறக்கட்டளையின் 116-வது கூட்டம் இன்று சோம்நாத்தில் நடைபெற்றது.
சோம்நாத் அறக்கட்டளையின் அறங்காவலர்கள் இதில் பங்கேற்றனர்: பிரதமர் திரு. நரேந்திர மோடி, திரு. லால் கிருஷ்ண அத்வானி, திரு. அமித் ஷா, திரு. கேஷுபாய் படேல், திரு. பி. கே. லஹரி, திரு. ஜே. டி. பார்மர் மற்றும் திரு. ஹர்ஷ் நியோடியா
இந்த கூடத்தில் பேசிய பிரதமர், சோமநாதர் கோவில் வளாகத்தில் குடிநீர், பசுமை வளங்கள் என அனைத்து வசிதிகளையும் ஏற்படுத்தி மேம்படுத்தப்பட வேண்டும் என்று கூறினார். வேராவல் மற்றும் பிரபாச பட்டினம் ஆகிய நகரங்களை பணமில்லா சமூகமாக மாற்றும் நடவடிக்கைகளை அறக்கட்டளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மேலும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து பிரதான நகரங்களில் திருவிழாக்களை அறக்கட்டளை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
2017-ஆம் ஆண்டிற்கும் திரு. கேஷுபாய் படேல் அவர்கள் இந்த அறக்கட்டளையின் தலைவராக தொடர்வார் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.