QuotePM-CARES Fund to procurement 1,50,000 units of Oxycare System at a cost of Rs 322.5 Crore.
QuoteComprehensive system developed by DRDO to regulate oxygen being administrated to patients based on the sensed values of their SpO2 levels.
QuoteDRDO has transferred the technology to multiple industries in India who will be producing the Oxycare Systems for use all across India.
QuoteOxycare system reduces the work load and exposure of healthcare providers by eliminating the need of routine measurement and manual adjustments of Oxygen flow

ரூபாய் 322.5 கோடி மதிப்பில் 1,50,000 ஆக்சிகேர் அமைப்பு முறைகளைக் கொள்முதல் செய்ய பிரதம மந்திரியின் குடிமக்களுக்கான உதவி மற்றும் நிவாரணம் (பிஎம் கேர்ஸ்)  அறக்கட்டளை நிதி ஒதுக்கியுள்ளது. இது, எஸ்பிஓ2  (ரத்த பிராணவாயு செறிவூட்டல்) அளவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்கு வழங்கப்படும். இது பிராணவாயுவைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ உருவாக்கிய விரிவான அமைப்பு முறையாகும்.

இந்த அமைப்பு இரண்டு கட்டமைப்புகளில் உருவாக்கப்பட்டுள்ளது. அடிப்படைக் கட்டமைப்பில் 10 லிட்டர் பிராணவாயு சிலிண்டர், அழுத்த விசை ஒழுங்குபடுத்தும் மற்றும் பிராணவாயுவின் போக்கைக் கட்டுப்படுத்தும் கருவி, ஈரப்பதமூட்டி, மூக்கில் பொருத்தப்படும் புனல் வகை உபகரணம் ஆகியவை இடம் பெறும். எஸ்பிஓ2 அளவீடுகளின் அடிப்படையில் பிராணவாயுவின் போக்கு மனித சக்தியால் கட்டுப்படுத்தப்படுகிறது. மற்றொரு திறன் வாய்ந்த கட்டமைப்பில் குறைந்த அழுத்த விசை ஒழுங்குபடுத்தும் கருவி, மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் எஸ்பிஓ2 நுண்ணாய்வு ஆகியவற்றின் வாயிலாக தானாகவே பிராணவாயுவை கட்டுப்படுத்தும் அமைப்பு முறைகளும் அடிப்படை கட்டமைப்பில் உள்ள அம்சங்களும் இடம்பெறும்.

எஸ்பிஓ2வை அடிப்படையாகக் கொண்ட பிராணவாயு கட்டுப்பாட்டு அமைப்பு முறை, நோயாளியின் எஸ்பிஓ2 அளவுகளின் அடிப்படையில் பிராணவாயு வழங்கப்படுவதோடு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு தூக்கிச் செல்லப்படும் வசதியுடையது. பிராணவாயு சிலிண்டரின் அயர்வுத்திறனை அதிகரிக்கிறது. தொடக்க நிலையில் எஸ்பிஓ2- வின் அளவுகளை மருத்துவ பணியாளர் நிர்ணயிக்க இந்த அளவுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அமைப்பு முறையால் காட்சிப்படுத்தப்படுகிறது. பிராணவாயுவின் போக்கை அவ்வப்போது மருத்துவ பணியாளர்கள் சரி செய்ய வேண்டியதன் பணிச்சுமையை இந்த அமைப்பு முறை குறைப்பதுடன், இதன் வாயிலாக தொலை மருத்துவ வசதியும் வழங்கப்படுகிறது. குறைவான எஸ்பிஓ2 அளவுகள், இணைப்பில் பிரச்சனைகள் போன்ற பின்னடைவின் போது  தானியங்கி முறையில் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். இந்த ஆக்சிகேர் கருவிகளை வீடுகளிலும், தனிமைப்படுத்தும் மையங்களிலும், கொவிட் சிகிச்சை மையங்கள் மற்றும் மருத்துவமனைகளிலும் பயன்படுத்தலாம்.

கூடுதலாக, ஆக்சிகேர் முறையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட பிராணவாயு சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் முகக் கவசங்களின் சிறந்த செயல்திறனால் பிராண வாயுவின் பயன்பாடு 30-40% குறைகிறது.

இந்தியாவில் உள்ள பலதரப்பட்ட தொழில் நிறுவனங்களுக்கு இந்தத் தொழில்நுட்பத்தை டிஆர்டிஓ உரிமை மாற்றம் செய்துள்ளதால் நாடு முழுவதும் ஆக்சிகேர் அமைப்புமுறையை இந்த நிறுவனங்கள் உற்பத்தி செய்யும்.

தீவிர மற்றும் அவசரகால கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிராணவாயு சிகிச்சையை தற்போதைய மருத்துவ நெறிமுறை பரிந்துரைக்கின்றது. பிராணவாயுவின் உற்பத்தி, போக்குவரத்து மற்றும் சேமிப்பின் தற்போதைய நிலையில் பிராணவாயு சிலிண்டர்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. தற்போதைய கொவிட் பெருந்தொற்று நிலையில், பெருமளவிலான நபர்களுக்கு பிராணவாயு சிகிச்சை தேவைப்படுவதால், அடிப்படை கட்டமைப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து உற்பத்தி ஆலைகளும் ஏற்கனவே தங்களது முழு கொள்ளளவில் இயங்குவதால் ஒரே ஒரு அமைப்பு முறையை மட்டுமே சார்ந்திருப்பது நடைமுறையில் சாத்தியமாகாமல் இருக்கலாம்.

எனவே தற்போதைய சூழலில் பலதரப்பட்ட அமைப்பு முறைகளைப் பயன்படுத்திக் கொள்வது ஏதுவாக இருக்கும். தற்போது நிலுவையில் உள்ள கார்பன் மாங்கனீஸ் எஃகு சிலிண்டர்களின் உள்நாட்டு உற்பத்தியாளர்களின் திறன் குறைந்த அளவாகவே இருப்பதால் மாற்று முயற்சியாக, சாதாரண பிராணவாயு சிலிண்டர்களுக்கு பதில் எளிதில் எடுத்துச் செல்லக்கூடிய இலகுவான சிலிண்டர்களை டிஆர்டிஓ பரிந்துரைத்துள்ளது.

Explore More
ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி

பிரபலமான பேச்சுகள்

ஒவ்வொரு இந்தியனின் இரத்தமும் கொதிக்கிறது: ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
India is not just a market, it’s a growth accelerator: Jennifer Richards, Aon Asia Pacific CEO

Media Coverage

India is not just a market, it’s a growth accelerator: Jennifer Richards, Aon Asia Pacific CEO
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
Prime Minister greets everyone on Guru Purnima
July 10, 2025

The Prime Minister, Shri Narendra Modi has extended greetings to everyone on the special occasion of Guru Purnima.

In a X post, the Prime Minister said;

“सभी देशवासियों को गुरु पूर्णिमा की ढेरों शुभकामनाएं।

Best wishes to everyone on the special occasion of Guru Purnima.”