பிரதமர் திரு. நரேந்திர மோடியை பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி. ஃபுளோரன்ஸ் பார்லி இன்று சந்தித்துப் பேசினார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் உள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதமரிடம் திருமதி. பார்லி விளக்கினார். இந்தியா, பிரான்ஸ் இடையேயான ஒத்துழைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பாதுகாப்பு ஒத்துழைப்பு இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். மேலும், பாதுகாப்புத் துறைக்கான உற்பத்தியில், “இந்தியாவில் தயாரிப்போம்” வழிமுறையிலும், கூட்டு ஆய்வு மற்றும் மேம்பாட்டிலும் தீவிர ஒத்துழைப்பு தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
அதிபர் மக்ரோனின் வசதிக்கு ஏற்ப, வெகு விரைவில் அவரை இந்தியாவில் வரவேற்க ஆவலுடன் இருப்பதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.